காஞ்சிபுரம், டிச.8:
காஞ்சிபுரத்தில் நம்பிள்ளை ஆச்சாரியான் சாற்றுமுறை உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் பாண்டவ தூதப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் நம்பிள்ளை ஆச்சாரியான் சந்நிதிக்கு எழுந்தருளி பக்தரகளுக்கு அருள்பாலித்தார்.
வைணவ ஆச்சாரியார்கள் பன்னிருவரில் ஒருவர் நம்பிள்ளை ஆச்சாரியான்.இவரது சந்நிதி காஞ்சிபுரத்தில் வரதராஜசுவாமி கோயில் அருகில் அமைந்துள்ளது.நம்பிள்ளை ஆச்சாரியானின் அவதார நட்சத்திரத்தையொட்டி இக்கோயிலில் 11 நாள் உற்சவம் நடந்து வருகிறது.இந்த உற்சவத்திற்காக காஞ்சிபுரம் பாண்டவ தூத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் நம்பிள்ளை ஆச்சாரியான் சந்நிதிக்கு எழுந்தருளினார்.
பெருமாளின் வருகையை வரவேற்கும் விதமாக நம்பிள்ளை ஆச்சாரியான் தனது சிஷ்யர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அவரது சந்நிதிக்கு வந்த பெருமாளை வரவேற்று அழைத்து சென்றார்.சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.