காஞ்சிபுரம்,ஆக.16:
கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் பெரியகாஞ்சிபுரம் திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து பால்க்காவடி, பன்னீர்க்காவடி,புஷ்பக்காவடி ஆகியனவற்றை எடுத்துக்கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.
மதியம் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
இரவு வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஆலய வளாகத்தில் உலா வந்து அருள்பாலித்தார்.
On Aadi Kirthigai, devotees thronged the Kumarakottam Murugan Temple in Kanchipuram, carrying milk, rosewater, and flower kavadi in a grand celebration.