காஞ்சிபுரம், ஆக.22:
பெரியகாஞ்சிபுரம் ஓபிகே புதுத்தெருவில் அமைந்துள்ளது வேணுகோபால சுவாமி பஜனைக்கோயில். இக்கோயிலில் கடந்த 16.8.25 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இதந் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை உறியடி உற்சவம் நடைபெற்றது.
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பலரும் உறியடி உற்சவத்தில் கலந்து கொண்டனர்.உற்சவர் வேணுகோபால சுவாமி கண்ணபிரான் அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.