Type Here to Get Search Results !

காஞ்சிபுரத்தில் இந்து முன்னணி சார்பில் 35-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா



விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் இந்து முன்னணி சார்பில் 35-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில், காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே 35-ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.


விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 10 அடி உயரம் கொண்ட அன்னப்பறவை மேல் அமர்ந்துள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.


இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, வணங்கி வழிபாடு செய்தனர். மேலும், கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


இவ்விழா மொத்தம் ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


In Kanchipuram, the Hindu Munnani organized the 35th Annual Vinayagar Chaturthi Festival near the Periyar pillar. A 10-feet tall idol of Lord Vinayagar seated on a swan was consecrated, followed by special poojas and deeparadhanai. Thousands of devotees participated, had darshan, and received annadhanam (free meals). The celebrations are planned for five days with grandeur.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.