காஞ்சிபுரம், ஆக.31:
காஞ்சிபுரம் மாநகராட்சி 26 வது வார்டு நசரத்பேட்டையில் வேலாத்தம்மன் ஆலயம் அமைந்துள்ளது.கூழ்வார்த்தல் நிகழ்வையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலையில் மூலவர் வேலாத்தம்மனுக்கும், உடனுறை புவனகிரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
உற்சவர்கள் வேலாத்தம்மனும்,புவனகிரி அம்மனும் ஆலய வளாகத்தில் ஊஞ்சலில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், அர்ச்சகர்கள், நசரத்பேட்டை கிராம பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.