Type Here to Get Search Results !

செப்.22 காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் தொடக்கம்

 



காஞ்சிபுரம், செப்.10:


🌸🔥 விபூதி யோகம் – வாழ்வை மாற்றும் தெய்வீக ரகசியம் 🙏 #astrology


மகாசக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் செப்.22 முதல் அக்.4 ஆம் தேதி வரை நடைபெறும்.


விழா நிகழ்ச்சிகள்:

  • செப்.22: பூர்வாங்க சண்டி ஹோமத்துடன் விழா தொடக்கம்.
  • தினசரி: லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் திருக்கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து நவராத்திரி மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அன்றைய தினம் முழுவதும் மண்டபத்தில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
  • செப்.30: துர்காஷ்டமி – அம்மன் துர்க்கையாக எழுந்தருளி சூரனை வதம் செய்து சூரசம்ஹாரம் நிறைவு.
  • அக்.1: சரஸ்வதி பூஜை.
  • அக்.2: விஜயதசமி – நவஆவர்ண பூஜை பூர்த்தி.
  • அக்.3: சகஸ்ர கலச ஸ்தாபனம்.
  • அக்.4: ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு.

இந்த நவராத்திரி உற்சவத்தில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, காமாட்சி அம்மன் அருளைப் பெறுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.