காஞ்சிபுரம், செப்.5:
காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரர் திருக்கோயில். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நிறைவு பெற்றிருந்தன.
இதனைத் தொடர்ந்கு கோயில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் இம்மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பிறகு புனிதநீர்க்குடங்கள் ராஜகோபுரத்துக்கு சிவாச்சாரியார்களால் மங்கள மேல வாத்தியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் திருவாலீஸ்வரருக்கும், திருநல்லழக்கிகும் திருக்கல்யாணமும் நடைபெற்றது.