காஞ்சிபுரம், மார்ச் 24:
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியில் வ.உ.சி.தெருவில் அமைந்துள்ள தீப்பாஞ்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியில் வ.உ.சி.தெருவில் அமைந்துள்ளது தீப்பாஞ்சியம்மன் திருக்கோயில்.இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை மாலையில் தொடங்கின.ஞாயிறுக்கிழமை மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பின்னர் புனிதநீர்க்கலசங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து மூலவர் தீப்பாஞ்சியம்மன்,பரிவார தெய்வங்களான சித்தி விநாயகர்,பாலமுருகர்,காலபைரவர், வாழ்முனீஸ்வரர் மற்றும் பெரியாண்டவர் சமேத அங்காள பரமேசுவரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடைபெற்றன.
கும்பாபிஷேக நிகழ்வுகள் காஞ்சிபுரம் படவேட்டம்மன் கோயில் நிர்வாக அறங்காவலர் எம்.ஜி.வடிவேல் தலைமையில் நடைபெற்றன.ஆலய தலைமை நிர்வாகி சங்கர் சுவாமிகள் மற்றும் நிர்வாகி யோகி ஆகியோர் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.அன்னதானமும் நடைபெற்றது.
மாலையில் மூலவர் தீப்பாஞ்சியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்திலும்,உற்சவர் தீப்பாஞ்சியம்மன் புதிய சிம்ம வாகனத்திலும் நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திரளான பக்தர்கள் கலந்து ùôண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.