காஞ்சிபுரம்,மார்ச் 24:
படவிளக்கம் : குருவிமலை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 21 அடி உயர வீர ஆஞ்சநேயர் சிலை
காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தில் 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இச்சிலைக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்படுவதையொட்டி யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.இதனைத் தொடர்ந்து நவக்கிரக ஹோமம் மற்றும் பூரணாகுதி தீபாராதனைகளும் நடைபெற்றன.
2வது நாளாக ஞாயிற்றுக்கிழமை கோ.பூஜை,விஷ்வசேனர் ஆராதனை ஆகிய நிறைவு பெற்று புனிதநீர்க் குடங்கள் வீர ஆஞ்சநேயர் சிலை அருகே எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து அன்னதானம்,நீர்மோர் ஆகியனவும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.குருவிமலையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் 21 அடி உயர வீர ஆஞ்சநேயரை தரிசித்தனர்.