கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு குழந்தை வேலாயுத சாமி திருக்கோவிலில் 48 ஆம் ஆண்டு திருப்படி திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் காரமடை திருமுருக பக்தர்கள் குழுவினர் ஏற்பாட்டில் கோவிலின் 108 திருப்படிகளிலும் திருப்புகழ் பாடல்களை பாடி, தீபம் மற்றும் கற்பூர ஆராதனைகளும், கோயிலில் மேல் பிரகாரத்தில் பிரணவதீப வழிபாடும், பக்தி சொற்பொழிவுகளும், காலை முதல் அன்னதானமும் நடைபெற்றது.
இவ்விழாவில் சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகனப்பிரியா, காரமடை நகர மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், காரமடை திமுக நகர கழக செயலாளர் வெங்கடேஷ், மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா ரங்கராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவு ரங்கராஜ், திமுக கோவை மாவட்ட பிரதிநிதி மேடூர் கணேசன், டி.ஆர்.எஸ்.ப்ராப்பர்ட்டி நிறுவனர் விஜயலட்சுமி சண்முகசுந்தரம், காரமடை நகர மன்ற உறுப்பினர் மல்லிகா ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் திருமுருக பக்தர்கள் குழு தலைவர் எ.கணேசன், செயலாளர் பி.தண்டாயுதபாணி, பொருளாளர் பி.தங்கவேலு மற்றும் குழுவினர் ஜி.ஆர்.ஸ்ரீதர், வாசுதேவன், பாலகிருஷ்ணன், கணபதி, மூர்த்தி ஆட்டோ பாலு, அரவிந்தகுமார் இருந்தனர்.