Type Here to Get Search Results !

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

 விருத்தாசலம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குருவன்குப்பம் கிராமத்தில்   அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயில்.  இந்த கோயில் 13 ஆண்டுகளுக்கு பிறகு புணரமைக்கப்பட்டு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் மற்றும் சப்த கன்னியர்  சுவாமிகளுக்கு ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (மே 11_ஆம் தேதி) சனிக்கிழமை மாலை மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிர்ஷங்கிரஷனம், ரக்க்ஷபந்தனம், கும்ப அலங்காரத்துடன் முதல் கால பூஜை நடைபெற்று திரவியாஹீதி, மகா பூர்ணாஹீதியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.



அதனைத்தொடர்ந்து  இரண்டாம் கால பூஜை ஆரம்பமாகி கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்ப்பட்டபிறகு கடம் புறப்படப்பட்டது. 



பின்னர்   பூர்வாங்க பூஜைகள் சுந்தரமுருகன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் விநாயகர், சப்த கன்னிமார்களுக்கு கும்பாபிஷேகம் செய்தனர். அதனைத்தொடந்து மாரியம்மன், காளியம்மன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது.


இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்று இரவு வான வேடிக்கைகள், மேளதாளங்களுடன்  அம்மன் சுவாமிகள் வீதி. உலா நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது 



விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் மற்றும் குருவன்குப்பம் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.