காஞ்சிபுரம், மே 29:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா நிறைவையொட்டி புதன்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வெட்டி வேர் சப்பரத்தில் வீதியுலா வந்தார்.
இத்தலத்தில் வைகாசித் திருவிழா நிகழ் மாதம் 20} ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான கருட சேவை 22ம் தேதியும், தேரோட்டம் 26} ஆம் தேதியும், தீர்த்தவாரி உற்சவம் 28ஆம் தேதியும் நடைபெற்றது.
திருவிழாவின் நிறைவு நாளையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் பெருமாள் வெட்டி வேர் சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டம், கருட சேவை மற்றும் தீர்த்தவாரி உற்சவத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுச் சிறப்பித்த வைகாசித்திருவிழா நிறைவு பெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன்,மணியக்காரர் கிருஷ்ணகுமார் தலைமையில் கோயில் ட்டாச்சாரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.