ஆவடி அடுத்த பட்டாபிராம் சோரஞ்சேரி கிராமத்தில் அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
![]() |
அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் சோரஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி உடனடியாக சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் பூரண அமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் சோறாஞ்சேரி கிராம பொதுமக்கள் முன்னிலையில் கடந்த மூன்று நாட்களாக ஆலயத்தின் அருகாமையில் யாகசாலைகள் அமைத்து வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு மூலிகைகள் கொண்டு சிவாச்சாரிகள் இன்று கோபுரத்தில் மேல் வைக்கப்பட்ட கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கலசத்திற்கு தீபாரதனைகள் காண்பித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
![]() |
வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் நடைபெற்ற பூஜை காட்சி |
கருவறையில் உள்ள அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.
இந்த கும்பாபிஷேகத்தில் அருகில் இருக்கும் கிராமத்தினரும் ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். சாமி தரிசனம் செய்தனர்.
பின்பு அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சினை ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் நடைப்பெற்றது