காஞ்சிபுரம், ஜூன் 11:
காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் வைகாசி மாத ஆயில்ய திரு அவதார நட்சத்திரத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் மனைவி லோப முத்திரையுடன் கூடிய அகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. முழுவதும் கருங்கற்களால் அமைக்கப்பட்டு இக்கோயிலில் அண்மையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வைகாசி மாத ஆயில்ய திருநட்சத்திரத்தையொட்டி மூலவர் அகத்தீஸ்வரருக்கும், அவரது மனைவி லோபமுத்திரைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.