Type Here to Get Search Results !

நாளைய (10-07-2024) ராசி பலன்கள்

 


 


மேஷம் (Aries)

 குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் மறையும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மாற்றத்தை ஏற்படுத்தும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள். 

அஸ்வினி :  கலகலப்பான நாள்.

பரணி : நெருக்கம் உண்டாகும்.

கிருத்திகை : ஆதாயம் ஏற்படும்.



ரிஷபம் (Taurus)

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் மறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செலவு நிறைந்த நாள்.

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி : மாற்றம் உண்டாகும். 

மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.




மிதுனம் (Gemini)

எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

மிருகசீரிஷம் : உற்சாகமான நாள்.

திருவாதிரை : இலக்குகள் பிறக்கும்.

புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.




கடகம் (Cancer)

மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்பு உண்டாகும். தோற்றப் பொலிவில் மாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். பாராட்டு கிடைக்கும் நாள்.

புனர்பூசம் : குழப்பங்கள் நீங்கும். 

பூசம் : ஒத்துழைப்பான நாள்.

ஆயில்யம் : சோர்வுகள் விலகும்.




சிம்மம் (Leo)

உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.

மகம் : புரிதல் அதிகரிக்கும்.

பூரம் : தடுமாற்றமான நாள்.

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.




கன்னி (Virgo)

தந்தை வழி உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொலைதூர பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நலம் நிறைந்த நாள். 

உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும். 

சித்திரை :  நெருக்கடிகள் குறையும்.



துலாம் (Libra)

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் மேன்மை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

சித்திரை : பொறுப்புகள் கிடைக்கும்.

சுவாதி : ஆதரவான நாள்.

விசாகம் : மேன்மையான நாள்.



 விருச்சிகம் (Scorpio)

ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான தேடல் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். மாற்றம் ஏற்படும் நாள்.

விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

அனுஷம் : பயணங்கள் சாதகமாகும். 

கேட்டை : நம்பிக்கை பிறக்கும்.



தனுசு (Sagittarius)

உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மறதி மறையும் நாள்.

மூலம் : மாற்றமான நாள்.

பூராடம் : சூழ்நிலையறிந்து செயல்படவும். 

உத்திராடம் : புரிதல்கள் மேம்படும். 




மகரம் (Capricorn)

குழந்தைகளின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். அரசு விஷயங்களில் பொறுமையை கையாளவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். சமூகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பணிவு வேண்டிய நாள்.

உத்திராடம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும். 

திருவோணம் : வாய்ப்புகள் தாமதமாகும்.

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.




கும்பம் (Aquarius)

தாய் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர் கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வங்கி சார்ந்த உதவிகள் கிடைக்கும். அசதி விலகும் நாள்.

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

சதயம் : முன்னேற்றமான நாள்.

பூரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.



மீனம் (Pisces)

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நெருக்கடியாக இருந்துவந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கற்பனைத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

பூரட்டாதி : முடிவுகள் கிடைக்கும். 

உத்திரட்டாதி : இலக்குகள் பிறக்கும். 

ரேவதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.