படவிளக்கம்: மாணிக்கவாசகர் குருபூஜையையொட்டி நடைபெற்ற திருவாசகம் முற்றோதலில் பங்கேற்ற சிவனடியார்கள்
காஞ்சிபுரம், ஜூலை 9:
காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆனி மாதம் மக நட்சத்திர நாளில் மாணிக்க வாசகப் பெருமான் நடராஜ சுவாமியின் திருவடிகளில் சேர்ந்த நாளில் ஆண்டு தோறும் மாணிக்கவாசகர் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டுக்கான மாணிக்கவாசகர் குருபூஜை விழாவையொட்டி காமாட்சி அம்பிகை திருவாசகம் முற்றோதல் பேரவை சார்பில் சிவ.வசந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தேவாரம்,திருமுறை ஆகியனவும் சிவனடியார்களால் பாடப்பட்டது. பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானமும்,ஆலய பிரசாதமும் வழங்கப்பட்டது.நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.