படவிளக்கம்: கும்பாபிஷேகத்தையொட்டி மூலவர் புளியாத்தம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்
காஞ்சிபுரம், ஜூலை 10-
காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புளியாத்தம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகை காரை கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த புளியாத்தம்மன் கோயில். இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நிகழ் மாதம் 8 ஆம் தேதி திங்கள்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது.
பின்னர் யாகாசலையில் வாஸ்து சாந்தி,கலச ஸ்தாபனம் ஆகியனவும் நடைபெற்றது.யாகசாலை பூஜைகள் சத்யநாராயண சர்மா தலைமையில் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூரணாகுதி தீபாராதனை நடைபெற்ற பின்னர் புனித நீர் கலசங்கள் கோபுரங்களுக்கு சிவாச்சாரியார்களால் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் மூலருக்கும்,உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம்,துணைத் தலைவர் கவிதா டில்லிபாபு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இரவு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், நாட்டாண்மைதாரர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.