சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நுழையும் போது அது சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சூரிய பகவான் மகர ராசிக்குள் பிரவேசிப்பார்.
அப்படி சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள் தான் மகர சங்கராந்தி பண்டிகை. இந்த நாளில் சூரிய பகவானுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவருக்குரிய வழிபாட்டை முறையாக செய்ய சூரிய பகவானின் அருளும் ஆசியும் கிட்டும் என்பது ஐதீகம்.
ஜனவரி 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணிக்கு சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிப்பார். இந்த நாளில் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படும்.
மேலும் நீராடுதல் மற்றும் தானம் செய்வதன் முக்கியத்துவமும் இந்த நாளில்தான் இருக்கும். இந்த நாளில், மக்கள் சூரியன் மகர ராசிக்குள் நுழைந்த பிறகு புனித நதியில் நீராடி, தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்ய வேண்டும், அப்போதுதான் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மகர சங்கராந்தி 2025 சுப முகூர்த்தங்கள்
மகர சங்கராந்தியன்று நீராடுதல் மற்றும் தானம் செய்வதற்கான சிறந்த முகூர்த்தம் காலை 9:03 மணி முதல் 10:48 மணி வரை. இது தவிர, பொதுவான சுப முகூர்த்தம் காலை 9:03 மணி முதல் மாலை 5:46 மணி வரை. இந்த சுப முகூர்த்தங்களில் புனித நதியில் நீராடி, தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்வதால் பல மடங்கு பலன்கள் கிடைக்கும்.
சூரிய பகவான் வழிபாட்டு முறை
ஜனவரி 14 ஆம் தேதி காலை சுப முகூர்த்தத்தில் புனித நதியில் நீராடுங்கள். இது முடியாவிட்டால், வீட்டிலும் நீராடும் மந்திரங்களைச் சொல்லி குளிக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான நீரை எடுத்து உதிக்கும் சூரியனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த நீரில் சிறிது குங்குமம் மற்றும் சிவப்பு பூக்களையும் சேர்க்க வேண்டும்.
சூரியனுக்கு அர்ச்சனை செய்யும் போது “ஓம் சூர்யாய நம:” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். சூரிய பகவானுக்கு வணக்கம் செலுத்தி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்த நீர் காலில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பூஜை செய்த பிறகு, சூரிய பகவானுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். இந்த முறையில் சூரிய பகவானை வழிபட்ட பிறகு, தேவைப்படுபவர்களுக்கு உங்கள் விருப்பப்படி, உடைகள், உணவு, தானியங்கள் போன்றவற்றை தானம் செய்யலாம்.
தனுசு ராசியிலிருந்து சூரிய பகவான் மகர ராசிக்குள் ஒரு மாதம் சஞ்சரிக்கும் காலம் தான் தை மாதம்.
நவபஞ்சம ராஜ யோகம்
சூரிய பகவான் குருவுக்கு 9 ஆம் வீட்டிலும், குரு சூரியனுக்கு 5 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் நவபஞ்சம ராஜ யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் பண வரவு, தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் நற்பலன்கள் அனுபவிக்கப் போகின்றனர்.
இந்த மாதம் முழுவதும் சூரிய பகவான் மகர ராசியில் சஞ்சரிப்பார். சூரியனின் இந்த சஞ்சாரத்தால் தை மாதம் முழுவதும் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம் (Mesham)- Aries
மேஷம் ராசிக்கு தை மாதம் அற்புதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு ஐந்தாம் அதிபதியான சூரிய பகவான் பூர்வ புண்ணிய பலன்களை கொடுப்பார். அவர் தற்போது பத்தாம் இடமான மகரத்தில் வீற்றிருக்கிறார். சூரியனுக்கு மகரம் பகை வீடு தான். கும்பத்தில் சனி பகவான் இருப்பதால், சூரியன் ஸ்தான பலம் என்கிற நிலையில் உள்ளார். அதனால் தை மாதம் மிகவும் நிறைவாக இருக்கும்.
பலருக்கு திடீர் திருமண யோகம் ஏற்படும். குடும்ப உறவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். குரு மகரத்தை பார்ப்பதால் சிவகடாட்சம் அமைப்பு வருகிறது. இதனால் புதிய கடன்களை பெறுவது, ஏற்கனவே பெற்ற கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் விருத்தி அடையும். புதிய வீடு கட்டுவதற்கான முயற்சியில் முன்னேற்றம் இருக்கும்.
சிலருக்கு கண், காது, மூக்கு, தொண்டை தொடர்பாக அவ்வபோது லேசான பிரச்னைகள் வந்து செல்லும். உங்கள் ராசிக்கு யோகாதிபதியான சனீஸ்வரன் பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ளார். இதனால் சிந்தனைகள் அதிகரிக்கும். சிறு பிரச்னைகளை கூட பெரியளவுக்கு யோசித்து கவலை கொள்வீர்கள். இருப்பினும் அதைப்பற்றி பெரிதாக யோசிக்காமல் மற்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
மொத்தத்தில் தை மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் வெற்றியை தான் கொடுக்கும். இருப்பினும் மனதில் அவ்வபோது ஏற்படும் கவலைகள் நீங்க அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதால் பிரச்னைகளை தகர்த்தெறிந்து வேகமாக முன்னேற உதவும்.
குடும்பத்தில் சில சவால்கள் இருக்கலாம், ஆனால் உங்களின் ஆதரவு மற்றும் கடுமையான உழைப்பினால் அதற்கான தீர்வு கிடைக்கும்.
ரிஷபம் (Rishabam) -Taurus
ரிஷபம் ராசிக்கு சூரியன் ஒன்பதாம் இடத்தில் வீற்றிருக்கிறார். இது தாய், தகப்பன் ஆசி, உதவிகள் ஆகியவற்றை குறிக்கும். வாழ்க்கை பாதையில் முன்னோர்களின் வழிகாட்டுதல் மூலம் வெளிச்சம் பாய்ச்சும் மாதமாக இருக்கும். சூரியன் ஒன்பதாம் இடத்தில் இருந்து கொண்டு உங்களின் மூன்றாம் இடத்தை பார்க்கிறார். இதனால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவடையும்.
11வது இடத்தில் ராகு பகவான் வீற்றிருக்கிறார். வெளிநாட்டில் இருப்போருக்கு வீடு, மனை, வாகனம் வாங்கக் கூடிய அமைப்புகள் உருவாகியுள்ளது. வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்காக முயற்சி செய்வோருக்கும் நல்ல செய்தி கிடைக்கும். வாய்ப்புகள் வரும்போது பதற்றத்தை தவிர்த்து கவனமுடன் அணுக வேண்டும்.
குரு பகவான் ஐந்தாம் இடத்தை பார்ப்பதால் உங்கள் குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமைப்பு உருவாகும். நீண்ட காலமாக செல்ல நினைத்த கோயில்கள், சொந்த பந்தங்களை சந்திப்பார்கள். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்றாக இணைந்து பயணிப்பார்கள்.
மொத்தத்தில் தை மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் வெற்றியை தான் கொடுக்கும். இருப்பினும் மனதில் அவ்வபோது ஏற்படும் கவலைகள் நீங்க அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதால் பிரச்னைகளை தகர்த்தெறிந்து வேகமாக முன்னேற உதவும்.
நீண்ட கால சாதனைகள் தேவைப்பட்டால், ஒவ்வொரு படியிலும் நீண்ட குறிக்கோள்களை வைப்பது சிறந்தது. சொத்துகளின் பராமரிப்பு மற்றும் வருமானத்தின் மேம்பாடு எதிர்காலத்திலும் சாதனையை ஏற்படுத்தும்.
மிதுனம் (Mithunam) -Gemini
மிதுன ராசிக்காரர்களுக்கு மூன்றாவது பாவத்தின் அதிபதியாக இருக்க கூடிய சூரிய பகவான் உங்களுக்கு எட்டாம் இடத்தில் மறைந்திருக்கிறார். எட்டாம் இடத்தில் ராசிநாதன் புதனும் இணைந்திருக்கிறார். சூரிய பகவானும், புதனும் எட்டாம் இடத்தில் இருப்பதால் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். சூரியனும் புதனும் ஜாதகத்தின் அடிப்படையில் 1, 7, 8 ஆம் இடத்தில் இருக்கும் நிலையில் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
சூரியனும், புதனும் எட்டாம் இடத்தில் இருந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் தன பாக்கியம் கூடிவரும். உங்களைச் சுற்றியிருந்த அனைத்து இருள்களும் மறையும். வெளிச்சமான வாழ்க்கை உண்டாகும். இறைவனின் அருள் கிடைக்கும்.
நான்காம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் உணர்ச்சிவசப்படாமலும், கோபப்படாமலும் எந்த இடத்தில் காரியத்தை எப்படி சாதிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பீர்கள். இதே செவ்வாய் ஏழாய் இடத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏழாம் இடத்துக்கான அதிபதி 12 ஆம் இடத்தில் இருப்பதாலும், ஏழாம் இடத்தை செவ்வாய் பார்ப்பதாலும் புதிய தொழில் தொடங்குவது, கூட்டாளிகளுடன் இணைந்து தொழில் செய்வது, பகலெல்லாம் கடினமாக உழைக்கின்ற இடங்களில் எல்லாம் என்னையே பழிவாங்குகிறார்கள் என்று எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றும். இதனை பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டும்.
சனீஸ்வர பகவானும் ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் இடமாற்றம் உண்டாகும். வெளிநாடுகள், வெளியூருக்குப் போகும் யோகம் உண்டாகும். அங்கு பணியாற்றும் வாய்ப்பு வரும். அரசு வேலைகளுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு வேலை கிடைக்கும். சுக்கிர பகவான் ராகு பகவானுடன் இணைந்து சுக்கிர பகவான் உச்சம் பெற்றிருக்கிறார். ஆண்கள் மூலமாக பெண்களுக்கும், பெண்கள் மூலமாக ஆண்களுக்கும் உதவிகள் வந்து சேரும்.
அர்த்தமாதிபதி 9 ஆம் இடத்தில் வீற்றிருப்பதால் வயதானவர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது. அம்மன் ஆலயங்களுக்கு கைங்கரியம் செய்வது கூடுதல் நற்பலன்களைத் தரும்.
கடகம் (Kadagam) - Cancer
கடக ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு இரண்டாம் பாவ அதிபதி தன குடும்ப வாக்காதிபதியாக இருக்கக் கூடியவர் ராசிக்கு ஏழாம் இடத்தில் போய் மகரத்தில் அமர்ந்திருக்கிறார். மகரத்தில் போய் அமர்ந்திருக்கும் சூரியன் உங்களுடைய ராசியை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஏழாம் இடத்தில் சூரியனும் புதனும் கண்டிப்பாக பெரிய குறைகள் எதுவும் ஏற்படாது.
கடகத்திற்கு எட்டாம் இடத்தில் சனி இருக்கிறார். இந்த சனீஸ்வர பகவானை பார்த்து தான் சூரியன் நகர்ந்து கொண்டிருக்கிறார். இதனால், கடகத்துக்கு இருந்து வந்த தடை, தாமதங்கள் எல்லாம் உடைத்து எரியப்படும். அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டிய பணம், வரவு செலவுகள் குழப்பம், பிரச்னைகள், தகராறுகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சொத்து, தொழில் சம்பந்தமான வழக்குப் பிரச்னைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள்.
ஏழாம் இடத்தில் சூரியன் இருப்பதால் குடும்பம் மற்றும் கணவன், மனைவிக்கிடையே நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதுவரைக்கும் குடும்பத்தில் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் தை மாதத்தில் தீரும். புதன் ஏழாம் இடத்தில் இருப்பது தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பூமி, கட்டடம், காண்டிராக் தொடர்பான தொழில்களை செய்யக்கூடியவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலமாக யோகம் உண்டாகும். ஏழாம் இடத்தில் குரு பார்ப்பதால் கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் இருப்பதால் சாணாக்கியத் தனமாக அதனை கடந்து செல்வீர்கள். மொத்தத்தில் சிறந்த மாதமாக இந்த தை மாதம் இருக்கும், ஸ்ரீ வில்லிபுத்தூர், ஸ்ரீ ரங்கம் சென்று சுவாமி தரிசனம் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
சிம்மம் (Simmam) -Leo
சிம்ம ராசிக்காரர்களைப் பொறுத்தவரை தை மாதத்தில் ராசி நாதன் ஆறாம் வீட்டில் வீற்றிருக்கிறார். ஆறாம் இடத்தில் சூரியன் இருப்பது மிகப்பெரிய சிறப்பைக் கொடுக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆறாம் இடத்தில் அசுப கிரகங்கள் இருப்பது யோகத்தைக் கொடுக்கும். உங்கள் ராசிநாதனாக இருந்தாலும் சூரிய பகவான் ஆறாம் இடத்தில் இருப்பது என்பது காலபூஷனுக்கு 10 ஆம் இடமாக இருப்பதாலும், காலபூஷனக்கு 4 ஆம் இடத்தை பார்ப்பதாலும் 4, 10 க்குரிய இரண்டு இடங்களுக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு கைகூடி வரும்.
தொழில் ரீதியான வளர்ச்சியைக் காண்பதற்கும், வெற்றி பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. சூரியன் உச்சம் பெறுகின்ற வீட்டுக்கு பத்தாம் இடத்தில் இருப்பதால் இந்த காலகட்டத்தில் தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடி வரும். அரசாங்கம், அந்நியர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் நல்ல மதிப்பையும், அனுகூலத்தையும் பெறுவீர்கள்.
பெயர், புகழ், விருது பெறுவதற்கான யோகங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம், இடமாற்றம், பதவி மாற்றம் உண்டாகும். சூரியன் 6ஆம் இடத்தில் இருப்பதும், சூரியனை செவ்வாய் பார்ப்பதும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மாதமாக இருக்கும்.
மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த தை மாதம், ஆரோக்கியம், ஆயுள் விருக்தி, நல்ல பணவரவு, மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, மனநிறைவு உள்ளிட்ட அனைத்து பலன்களையும் கொடுக்கும். அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். விசாகம், கார்த்திகை நட்சத்திர தினத்தன்று சென்று அர்ச்சனை செய்து வருவது நல்லது.
தொழிலில் முன்னேற்றம் மற்றும் பண வருமானம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி மற்றும் தைரியத்தின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
கன்னி (Kanni)- Virgo
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த தை மாதம் அமோகமான பலன்களைத் தரப் போகிறது. வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உங்கள் ஜாதகத்தில் 9 ஆம் இடத்தில் வியாழன் கிரகம் இருப்பதால் அனைத்து விதமான நல்ல பலன்களையும் பெறுவீர்கள்.
12 வது பாவ அதிபதியாக இருக்கக்கூடிய சூரியன் ஐந்தாம் விடத்தில் வீற்றிருக்கிறார். 12 வது இடம் என்பது அயன, சயன, போக பாக்கியங்கள் உண்டாவதால் யோகங்கள் உண்டாகும். கெட்டபெயர் வாங்குவது, நொடிந்து போவது, கஷ்டப்படுவது, தூக்கம் வராமலும் தவிப்பது உண்டாகும். குடும்பத்தில் என்னை யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதுபோன்ற மன அழுத்தத்தை சந்திப்பீர்கள். இவை எல்லாமே இந்த 30 நாட்களுக்கு மட்டுமே சந்திப்பீர்கள்.
குதூகலமான அனுபவங்கள் உண்டாகும் வாய்ப்புகளும் உண்டு. உத்தியோகத்தில் ஒரு பக்கம் உங்களுக்கு வேலைப் பளு, பொறுப்புகள் கூடும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு பொறுப்புகள், கடின உழைப்பு, அதிக தூரம் பயணிக்க வேண்டிய சூழல் உண்டாகும். 6 ஆம் இடத்தில் சனி இருப்பதால் மிகப்பெரிய உசிதம். நோய், விபத்து, கடன், சட்டம் வழக்கு போன்ற கெட்ட சம்பவங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
பயணத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் விருத்திகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், பூமி சார்ந்த தொழில், கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு நிறைவான காலமாக இருக்கும். 7 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் அந்நிய தேசத்தில் வாழ்பவர்களுக்கு கொண்டாட்டமான காலமாக இருக்கும். பக்கத்தில் இருக்கக்கூடிய ஜீவ சமாதியில் வழிபாடு செய்தால் உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். நல்லவை எவை, கெட்டவை எவை என்பதை கண்டுணர்ந்து செயல்படுவதற்கான ஆற்றல் உண்டாகும்.
குடும்ப உறவுகளின் மேல் அதிக கவனம் செலுத்தி, விருப்பங்களை ஏற்கவும், நல்ல தோழமையை பராமரிக்கவும்.
துலாம் (Thulaam)- Libra
துலாம் ராசிக்காரர்களுக்கு தை மாதத்தில் உங்கள் ராசிநாதன் உச்சம் பெற்றிருக்கிறார். உச்சத்தில் சுக்கிரன் அமர்வது என்பது மிகப்பெரிய சிறப்பை உண்டாக்கும். இதுவரை தொழிலில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் விலகும். தொடர் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆறாம் இடத்தில் சுக்கிரன் அமர்வதால் எப்படி உழைக்க வேண்டும். யாரிடம் எதை பேச வேண்டும். எதைத் தவிர்க்க வேண்டும். எதை செய்ய வேண்டும். செய்யக் கூடாது என்பது குறித்த ஆற்றல், அனுபவம் கிடைக்கும்.
வியாழனும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றிருக்கிற காரணத்தால் இந்த தை மாதத்தில் துலாமில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை நடக்கக்கூடியவர்களால் நற்பலன்கள கிடைக்கும். வியாழ திசை நடப்பவர்களால் ஆதாயம் பெறுவீர்கள். குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுவது பணம், தர்மம், நியாயம், நீதி, அறிவு, திறமை, ஆற்றல், உழைப்பு, அனுபவம், சந்தோஷம், வெற்றி, குதூகலம், கொண்டாட்டம் என அனைத்து விஷயங்களிலும் இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து செல்வச் செழிப்பான முன்னேற்றப் பாதைகளை உங்களுக்கு காட்டிக் கொடுக்கும்.
12 ஆம் இடத்தில் கேது பகவான் வீற்றிருப்பதால் அயன, சயன, புகழ், போக பாக்கியத்தை உண்டாக்கும். குரு பகவான் பார்வையில் வீற்றிருப்பதால் கணவன், மனைவி, குடும்ப உறவுகள், சண்டைகள் விலக்கிக் கொள்வது, பிரிந்தவர்கள் சேர்வது போன்ற விஷயங்கள் நடக்கும். 6 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் எதிரிகளை வென்று காட்டுவீர்கள். கடன்களை கட்டி முடிப்பீர்கள். மொத்தத்தில் இந்த மாதம் சிறப்பம்சங்களைத் தரும். அருகில் இருக்கும் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். குடும்பத்தில் பாசம் மற்றும் உதவி அதிகரிக்கும்.
விருச்சிகம் (Viruchigam) -Scorpio
சூரியன் 3ஆம் வீட்டில் அமைதியான தைரியத்தை உருவாக்குகிறது. இது எதிரிகளை வெல்வதற்கான சாத்தியத்தை உருவாக்குகிறது. இப்போது நீங்கள் பல்வேறு சவால்களை சமாளிக்க முடியும். புது வாய்ப்புகள் உங்களுக்காக வருகின்றன.
உங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்கு அனுகூலமான நேரம். இது பயணங்களுக்கும், உத்தியோகபூர்வ வியாபார முயற்சிகளுக்கும் உகந்த நேரம்.
சூரியனின் பெயர்ச்சி காரணமாக உருவாகும் நவபஞ்சம யோகத்தால் அற்புதமான பலன்களை அடைவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் நீங்கும். இணக்கமான சூழல் உருவாகும். வெளியூர், வெளிநாடு பயணங்களால் அனுகூலமாக பலன்கள் கிடைக்கும். வேலைகளில் உங்களுடைய செயல்திறன் அதிகரிக்கும். உங்களுடைய தலைமைப் பண்பு அதிகரிக்கும். கடின உழைப்பைக் கொடுத்த முன்னேறுவீர்கள். செய்யும் அனைத்து காரியங்களிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தவறாகப் புரிந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய வேலைகளில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
தனுசு (Dhanusu)- Sagittarius
தன ஸ்தானத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகம் உருவாகுவதால் அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். உங்கள் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிதிநிலை மேம்படும். வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சேமிப்பு, முதலீடு சார்ந்த விஷயங்களில் லாபத்தைப் பெறுவீர்கள். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பணம் சார்ந்த விஷயங்களில் வளர்ச்சியைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி பெருகும்.
சூரியன் 2ஆம் வீட்டில் இருக்கும்போது, உங்களுக்கு குடும்ப உறவுகளின் மேல் கவனம் தேவை.
சில செலவுகளும் உண்டாகலாம், அதனால் வருமானத்தை நிர்வகிக்க முக்கியமாக இருக்கும். பண வருமானத்தில் திடீர் அதிகரிப்பு மற்றும் சராசரி செலவுகளுடன் சந்திக்க நேரிடும்.
ஆனால் செயல்படும் உங்கள் திட்டங்களின் மூலம், இப்போது வருமானத்தில் குறையுமா அல்லது உத்தியோகபூர்வ வாய்ப்புகள் விலகுமா என்பதற்கான தீர்வுகள் எளிதாகக் கிடைக்கும்.
மகரம் (Magaram)- Capricorn
மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கவுள்ளார். சூரியனின் இடமாற்றமும், அதனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் அமோக பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் வாழ்க்கையில் இனிமையான சூழல் நிலவும். வேலையில் தன்னம்பிக்கை உண்டாகும். மன உறுதி, வலிமை அதிகரிக்கும். மனதில் நல்ல தெளிவு பிறக்கும். எட்டும் முடிவுகள் சிறப்பானதாக இருக்கும். எடுத்த காரியங்களையும், பொறுப்புகளையும் சரியாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பணப் பரிவர்த்தனை மற்றும் செலவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சூரியன் 1ஆம் வீட்டில் இருப்பதால், உங்களுக்கு ஒரு அதிகமான எதிர்வினை மற்றும் கெடுதல் சம்பந்தப்பட்ட சவால்களைத் தரலாம்.
இதனால் பண வருமானத்தில் சிக்கல்கள், செலவுகளின் அளவு அதிகரிக்கும்.
இதனைக் கவனித்து தீர்வுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கடுமையான உழைப்பை நோக்கி, உங்கள் வழியை கற்றுக்கொண்டு செல்லவும்.
கும்பம் (Kumbam)- Aquarius
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த தை மாதம் பல அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் மாதமாக அமையப் போகிறது.
கும்ப ராசி நேயர்களுக்கு தை மாதம் மிக அருமையான மாதமாக இருக்கப் போகிறது. நினைத்ததை சாதிப்பீர்கள். நினைத்த இடங்களுக்குச் சென்று வருவீர்கள். நினைத்தபடி வாழ்வீர்கள். துன்ப துயரங்கள் விட்டுப்போனது என்று நம்பலாம். தேவைப்படுகிற பொருளாதார விருத்திகள் விரைவில் வரும். யாரென்று தெரியாதவர்களின் உதவிக்கரம் உங்களுக்கு கிடைக்கும்.
செய்து வருகின்ற காரியங்களில் பெயர், புகழ் கிடைக்கும். செய்த காரியத்தின் மூலமாக லாபம் கிடைக்கும். பொருளாதார அபிவிருத்திகள் உண்டாகும். புதிதாக எதாவது வாங்க வேண்டும் விற்க வேண்டும் என்றால் இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யலாம். பல கோணங்களில் கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த தை மாதம் மிகச் சிறப்பை தரக்கூடிய மாதமாக இருக்கும்.
சூரியன் ராசியை நோக்கி பயணிப்பதால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், தங்க முதலீடு, பங்குச்சந்தை முதலீடு போன்றவற்றில் உங்களுக்கு வளர்ச்சி ஏற்படும். வர வேண்டிய பணம் உங்களைத் தேடி வரும். பொருளாதாரத்தை விருத்தி செய்யக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.
பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். அரசு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு தேடி வரும். இப்படி சகல சம்பத்துகளும் பெற்று இந்த தை மாதம் மகிழ்ச்சி தரக்கூடியதாக உங்களுக்கு இருக்கும். மலைக் கோயில்களுக்குச் சென்று சுவாமி வழிபாடு செய்வது உங்களுக்கு சிறப்பான பலனைத் தரும்.
மீனம் (Meenam) - Pisces
சூரியன் 11ஆம் வீட்டில் இருப்பதால், உங்கள் வருமானம் அதிகரிக்கும், பணத்திலும் நிலைப்பாட்டிலும் முக்கியமான முன்னேற்றங்கள் காண முடியும்.
உங்கள் ஆரோக்கிய நிலை நல்லதாக இருக்கும், ஆனால் உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப உறவுகளுக்கான நேரத்தை அர்ப்பணிப்பது முக்கியம். இப்போது உங்கள் ஆன்மிக திறன்கள் மேம்படும்.
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் நவபஞ்சம யோகம் உருவாகுவதால் அதிர்ஷ்டம் பெறுவீர்கள். உங்களுடைய ஆற்றல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள்.
நண்பர்கள், உறவினர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள. அவர்களுடைய முழு ஆதரவும் கிடைக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
எதிர்காலத்துக்கான தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இலக்குகளை அடைவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.