காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட 44வது வார்டு வேதாச்சலம் நகர் இளைஞர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடினர்.
விநாயகரின் பிறந்தநாள் ஆக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியாக ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் உள்ள தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 44 வது வார்டு வேதாச்சலம் நகர் பகுதியில் இளைஞர்கள் சங்கம் சார்பில் 11வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேதாச்சலம் நகர் இளைஞர்கள் ஒன்று கூடி விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை ஒட்டி 15 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை கொண்டு வந்து முக்கிய நகர் வீதி வழியாக வளம் வந்து பொதுமக்களுக்கு தீபக் அதனை காண்பித்து விநாயகரை வழிபட்டனர்.
இதில் வழியெங்கும் வலம் வந்த விநாயகரை தீபாராதனை காண்பித்து பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். இதில் ஏராளமான பக்தர்களுக்கு சிறப்பு தீபாராதனையும் அன்னதானமும் வழங்கப்பட்டது.