காஞ்சிபுரம், அக்.10:
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தின் ஏரிக்கரையில் அமைந்துள்ளது
27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில், மாதாந்திர சங்கட ஹர சதுர்த்தியையொட்டி இக்கோயிலில் காலையில் மகா கணபதி ஹோமும், அதனையடுத்து மூலவர் நட்சத்திர விருட்ச விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக பக்தர்களுக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.